Skip to main content

A letter to my friend - Gurukulam editor

அன்புள்ள டாக்டர் அவர்களுக்கு,

பாலச்சந்திரன் எழுதுவது. தங்களுக்கு எழுதுவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். 

உங்கள் குருகுல தென்றல் புத்தகம் என்றும் அதே பொலிவுடன் வெளி வருவது கண்டு மேலும் மகிழ்ச்சி.

ஞான மார்க்கத்தையும் கர்ம மார்க்கத்தையும் கலப்பதால் வரும் குழப்பங்களை அழகாய் எடுத்துரைத்தீர்கள். உங்கள் எழுத்துக்கள் என்னுள் இருந்த சாய்வை நிமிர் செய்ய உதவியது. மிக்க நன்றி.

இவ்விஷயம் குறித்து என் மனதில் எழுந்த சில கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமை அடைகிறேன்:

உண்மையை நெருங்க நெருங்க ஞான, கர்ம, பக்தி மார்க்கங்களுக்கு இடையே உள்ள தூரங்கள் குறைந்து கொண்டே வருகின்றன. அவ்வகையில், உண்மையை நெருங்க இம்முன்று கயிற்றில் எதை பிடித்து பயணிப்பது என்பது வாழ்க்கையில் தோன்றும் கடினமான கேள்விகளில் ஒன்று. அதற்கு சரியான பதிலை அறிய, முதல் படியாக, நம்மை அம்முன்று கயிற்றிக்கும் சரி தூரத்தில் நிறுத்தி சம நோக்கு கொள்வதே ஆகும்.

இரண்டாவது  படி, சுய தர்மம் அறிய முற்படுதலாகும். இங்கே கீதையின் சாராம்சத்தில் விளங்கும் பல்வேறு பரிமாணங்களை முற்றிலும் உணர முற்படுதல் அவசியம் ஆகும். அஹிம்சை என்ற கோட்பாட்டை, மாமிச உணவு, கத்தி, போர், கோபம், இயலாமை, தற்பெருமை, நியாயம் என்று பலதரப்பட்ட கோணங்களில் மனனிப்பது அவசியமே. ஆயினும் அவற்றை பகுத்தறிய முட்படுகையிலும், எழுத்து வடிவம் கொடுக்கையிலும்  நடுநிலைமை காத்தல் நம் தலையாய கடமையாகும்.

மேலும், 'தன்'னை உணராதவர் கையில் உள்ள வாள் சமுதாயத்திற்கு அதிக தீங்கையே விழைவிக்கும் என்பது என் கருத்து. பிறர்க்கு உதவ தேவையான அடிப்படை விஷயம் தன்னை உணர்தலே. ரமண மகரிஷி பொன் மொழிகளில், 'தன்னை உணராதவன் ஊருக்கு உதவுவது, காலில் முள்  குத்தாமல் இருக்க, தன் காலில் செருப்பு அணியாமல் உலகத்தை தோலால் மூடுவது போலாகும்.

“Wanting to reform the world without discovering one's true self is like trying to cover the world with leather to avoid the pain of walking on stones and thorns. It is much simpler to wear shoes.” 

குருகுல தென்றல் வாசகர்களுக்கு தன்னை உணர்ந்து சுய தர்மம் தேடும் பாதையில் நடுநிலைமை என்ற விளக்கை எல்லாம் வல்ல இறைவன் எந்நேரமும் அளிப்பாராக!

இப்படிக்கு
சிவனடியான்
சி. பாலச்சந்திரன் 
20, Geervani, First Floor
6th Main Paramahamsa road,
Yadavagiri
Mysore - 570020
Ph: 72042 88166

Comments

Popular posts from this blog

My gentle companion!

The best thing I did in my ALTO journey to Sivakasi was to break the journey and start early in the morning from Salem. The whole trip from Bangalore to Sivakasi was around 500 kms and I'm happy that it took around 15 hrs for me to cover it....

Those words from Kodai panbalai varisai (FM) in my car radio still lingers in my mind.... What a way to package a 'western' thought in 'eastern' wrapper.

That tea shop in Kalavadi taught me more lessons than anything today. While I casually stopped in that tea shop at moring 6.30 AM, to have my first tea after driving for one and a half hours from Salem, little did I realize that the shop is owned and operated by the ugliest man (I have seen) with fire wounds leaving permanant marks on his distorted face and body. But the way he maintained his shop and treated his customers proved that humanity in him reigns supreme. I couldnt stop my urge to take a photo of him....

Though the roadside had mostly neem and tamarind trees, the o…